செய்யாறு அருகே துணை மின் நிலையம் திறப்பு

செய்யாறு அருகே புதிய துணை மின் நிலையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு அருகே துணை மின் நிலையம் திறப்பு
X

துணை மின் நிலையத்தை ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.

செய்யாறு அடுத்த அழிஞ்சல் பட்டு அருகில் உள்ள பெரும் புலி மேட்டில் புதியதாக ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த புதிய துணை மின் நிலையத்தை காணொளி காட்சி மூலமாக தமிழர்கள் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக செய்யாறு பகுதி சிப்காட் பகுதி அருகே அமைந்துள்ள செல்ல பெரும் புலி மேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் பயன்படும் வகையில் துணை மின் நிலையத்தை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி இயக்கி வைத்தார்.

சிப்காட் பகுதியில் உள்ள தொழில் கூடங்களுக்கும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் சீரான மின் விநியோகம் கிடைக்க இந்த துணை மின் நிலையம் பயன் உள்ளதாக இருக்கும். என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ராஜி, ஒன்றிய செயலாளர் சீனிவாசன் , சங்கர் , தினகரன், வெம்பாக்கம் ஒன்றிய குழு துணை தலைவர் நாகம்மாள் , செயற்பொறியாளர் சரவணன் மின்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நகராட்சி வார்டுகளுக்கான பகுதி சபா கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சிக்குட்பட்ட 25, 26,27 ஆகிய வார்டுகளுக்கான பகுதி சபா கூட்டம் திருவத்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கங்காதரன், கார்த்திகேயன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓ. ஜோதி எம்.எல்,ஏ, பங்கேற்றார்.

கூட்டத்தில் வார்டுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பாக உள்ளது, பள்ளி நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தடுக்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ஆற்று மணல் கொள்ளை போவதை தடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கூட்டத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி பேசுகையில் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அத்தியாவசிய முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் என். சங்கர், ஏ..ஞானவேல், நகராட்சி பணியாளர்கள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாநில வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் மனிஷ் நர்னவாரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்யார் சப்-கலெக்டர் அனாமிகா , செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி , ஊரக உதவி இயக்குனர்கள் சுரேஷ்குமார் , யுவராஜ் , கோட்ட உதவி திட்ட அலுவலர் இமயவர்மன் , வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், தாசில்தார் சத்யன், வெம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அருள் தேவி செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 8 Nov 2022 11:23 AM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...