திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார்

மருத்துவமனைக்கு சென்று வருவதாக மகனிடம் சொல்லி விட்டு வெளியே சென்ற மூதாட்டி வாகனம் மோதி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார்
X

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலித்தொழிலாளி. இவரின் தாயார் நாகம்மாள் (வயது 80). இவர் நேற்று மருத்துவமனைக்கு சென்று வருவதாக மகனிடம் சொல்லி விட்டு வெளியே சென்றார்.

ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. இந்தநிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ராஜேந்திரனுக்கு போன் செய்து உனது தாயார் நாகம்மாள் தூசி அருகே ஆக்கூர் கூட்டுச்சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடப்பதாக கூறினார்.

இதையடுத்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நாகம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 May 2022 11:59 AM GMT

Related News