/* */

'எண்ணும் எழுத்தும்' திட்ட இரண்டாம் பருவ ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Teacher Training -திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கல்வி வட்ட அளவில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

எண்ணும் எழுத்தும் திட்ட இரண்டாம் பருவ ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
X

வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேட்டை வழங்கினார்கள்.

Teacher Training -திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கல்வி வட்ட அளவில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட இரண்டாம் பருவ மூன்று நாள்கள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றது.

இதன் நிறைவு நாளான நேற்று செங்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் பயிற்சியை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட இடைநிலை, தற்காலிக ஆசிரியா்கள் என 300 ஆசிரியர்களுக்கு பயிற்றுவித்தார்.

பயிற்சி முகாமை வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, உதயகுமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, பயிற்சியின் நோக்கம் குறித்து ஆசிரியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த 184 ஆசிரியர் ஆசிரியைகளுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 3 நாட்கள் வரை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கீழ்பெண்ணாத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகிய மூன்று பாடங்களை எளிமையான முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கருத்தாளர்கள் செண்பகவல்லி, சுகந்தி, வெங்கட், பிரபு, மணிகண்டன், ரேவதி, பேபி, மாலா ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன் ஆறுமுகம் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேட்டை வழங்கினார்.

வந்தவாசி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்ட மூன்று தின பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது .வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனா நிறைவு விழாவில் பங்கேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி கையேடுகளை வழங்கினார்.

போரூரில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போளூர் ஒன்றிய ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என 302 பேர் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சியில் பங்கேற்றனர்.

பயிற்சியின்போது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் பார்வையிட்டு திட்டத்தின் செயல்பாடுகள் இடர்பாடுகளை திட்டத்தின் நோக்கம் குறிக்கோள் போன்றவை குறித்து பயிற்சியை நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் இடையே பேசினார்.

அவருடன் போளூர் வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தர், நேரு, விரிவுரையாளர்கள் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக பயிற்சியை மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Oct 2022 6:35 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!