/* */

ஆரணியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனம்: ஆக்‌ஷனில் இறங்கிய வருவாய்துறை

ஆரணியில் ஒரு லட்சம் செலுத்தினால் 10 மாதத்தில் மூன்று லட்சம் என ஆசை காட்டிய நிதி நிறுவனத்தில் தற்போது விசாரணை.

HIGHLIGHTS

ஆரணியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனம்: ஆக்‌ஷனில் இறங்கிய வருவாய்துறை
X

ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதியதாக ஆரூத்ரா கோல்டு கம்பெனி கடந்த 6ம் தேதி எந்த ஓரு விளம்பரமின்றி திறக்கபட்டன.

மேலும் ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்கள் டெபாசிட் தொகை வசூலிக்க கூடாது எனவும், எந்த ஒரு நிறுவனம் சம்மந்தபட்ட பகுதியில் உள்ள வருவாய் துறை மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று கிளைகள் தொடங்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளன.

1லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 36,000 ரூபாய் வட்டியாகவும், தொடர்ந்து 12 மாதம் வழங்கபடுவதாகவும், அதனையடுத்து டெபாசிட் செய்த பணத்தை கொண்ட ஆவணம் புதுப்பித்து தரப்படும் என்று கவர்ச்சிகரமான திட்டமாக பொதுமக்களுக்கு ஆரூத்ரா நிறுவனம் தெரிவித்துள்ளன. இந்த ஆரூத்ரா கோல்டு கம்பெனி தற்போது சென்னை அமைந்தகரை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 20 இடங்களில் கிளைகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

புதிய கிளை திறந்த 3 நாட்களில் மட்டும் 150 பேரிடம் ஒரு கோடியே 26 லட்சம் வசூல் ஆனதாக கூறப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆரணி கோட்டாட்சியர் ஆகியோருக்கு இந்த நிதி நிறுவனத்தை பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆரணி வருவாய் துறை தாசில்தார் பெருமாள், ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, உள்ளிட்ட போலீசார் ஆரூத்ரா கோல்டு கம்பெனி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நிறுவனத்தினரிடம் அரசின் அனுமதி பெற்றுள்ளீர்களா? ஆரணி பகுதியில் புதிய கிளை திறப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி வழங்கபட்டுள்ளன என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். கிளை அலுவலகத்தில் உள்ள மேலாளர் அசோக்குமார் இடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

மேலும், அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க 1 நாள் கால அவகாசம் வருவாய் துறையினர் ஆரூத்ரா கோல்டு கம்பெனிக்கு அளித்துள்ளனர். விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில் தங்க நாணயம் விற்பனை செய்வது வாங்குவது மட்டுமே என கட்டிட உரிமையாளரிடம் அனுமதி பெற்றுள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

இந்நிலையில் ஆரணிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறுகையில், ஆரணியில் கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் பணம் மோசடி செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புகார் உண்மை என கண்டறியப்பட்டால் அந்த நிறுவனத்தின் மீது வணிக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Updated On: 13 May 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  3. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  4. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  5. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  8. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  9. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  10. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!