/* */

யூரியா வாங்க அல்லல்படும் விவசாயிகள்

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் யூரியா வாங்குவதற்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளதால் விவசாயிகள் அவதியடைகின்றனர்

HIGHLIGHTS

யூரியா வாங்க அல்லல்படும் விவசாயிகள்
X

யூரியா வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்

சேத்துப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூரை, மன்சுரபத், பெரணம்பாக்கம், செம்மியமங்கலம், என பல ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான யூரியா பொட்டாஷ் போன்றவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் கன கடந்த 2019 ம் ஆண்டு முதல் யூரியா பெற ஆதார் அட்டை பதிவு முறை கொண்டுவரப்பட்டது. அதுமுதல் ஆதார் அட்டையுடன் சென்று கைரேகை பதிவிட்டு விவசாயிகள் உரம் பெற்று சென்றனர், உரத்துடன் கூடுதலாக சில மருந்துகளை வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்பட்டு வந்தது.

அதனால் சில மாதங்களாக யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தேவையற்ற பொருள்களையும் விவசாயிகள் பணம் கொடுத்து வாங்கி வந்தனர். இதனிடையே தனியார் அரசு உர விற்பனை நிலையங்களில் யூரியா இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரயில் மூலம் 2,600 மெட்ரிக் டன் யூரியா வரவழைக்கப்பட்டது.ஆனால் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தேவைக்கு குறைந்த அளவே யூரியா வினியோகம் செய்யப் பட்டது. இதனால் விவசாயிகள் யூரியா கிடைக்குமோ கிடைக்காதோ என கருதி ஆண்கள் பெண்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்து அல்லல்பட்டு வருகின்றனர் . ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு மூட்டை யூரியா என்று வழங்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது சூரியா தட்டுப்பாட்டால் நெல் பயிருக்கு தழைச்சத்து குறித்த நேரத்துக்கு கொடுக்க முடியாமல் பயிர்கள் வாடுகின்றன

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஒரு மூட்டை யூரியா ரூபாய் 266 க்கு விற்கப்படுகிறது, ஆனால் தனியார் கடைகளில் ரூபாய் 300க்கும் மேல் விற்கப்படுகிறது. மேலும் தேவையற்ற பொருள்களை வாங்க வருகின்றனர் இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

ஒரு ஏக்கர் வைத்துள்ளவர்களுக்கு ஒரு மூட்டை யூரியா வழங்குவது போதுமானது ஆனால் ஒன்றுக்கு கூடுதலாக 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மூட்டை யூரியா என்பது போதுமானது அல்ல. கூட்டுறவு கடன் சங்கத்தில் கைரேகை பதிவு இயந்திரம் ஒன்று மட்டும் உள்ளதால் விரைந்து வழங்க முடியாமல் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது இதனால் விவசாயிகள் இன்னல் அடைகின்றனர். என கூறினர்.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.

Updated On: 5 April 2022 2:27 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்