திருவள்ளூர் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை

திருவள்ளூர் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவள்ளூர் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை
X

திருத்தணி அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரம் இருளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் முத்து. கூலி தொழிலாளி இவரது மகன் சுப்ரமணி.(21) கடந்த சில நாட்களாக சுப்பிரமணி வேலை எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சுப்ரமணி வேலைக்கு செல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தாராம். அப்போது கோபம் அடைந்த சுப்பிரமணி தந்தை முத்து வேலை வெட்டிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தால் உணவு எப்படி கிடைக்கும் என்று கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததால் மனமுடைந்த சுப்பிரமணி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து அதனை மதுவில் கலந்து குடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுப்ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கடகமா சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்து வந்த மகனை கண்டித்ததால் மனமுடைந்து மகன் விஷம் அறிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் சுப்ரமணி தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உண்டா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Updated On: 1 Jun 2023 8:57 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    presentation cephalic meaning in tamil குழந்தையின் தலையை இயற்கையாக...
  2. இந்தியா
    சத்தியம், சிவம், சுந்தரம்! ராகுல்காந்தி சிறப்பு கட்டுரை..!
  3. இந்தியா
    சுத்தமா? கிலோ எவ்வளவு? : 48 மணி நேரத்தில் 31 பேர் இறந்த மகாராஷ்டிரா...
  4. லைஃப்ஸ்டைல்
    health quotes in tamil சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்:...
  5. சோழவந்தான்
    கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
  6. ஆன்மீகம்
    nainamalai temple சிவபெருமானின் முக்கிய தலமாக விளங்கும் நைனாமலைக்...
  7. தமிழ்நாடு
    மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
  8. இந்தியா
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
  9. இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
  10. தமிழ்நாடு
    இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...