Begin typing your search above and press return to search.
திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமநை்தனர்.
HIGHLIGHTS

கவிழ்ந்து கிடக்கும் லாரி.
திருவள்ளூர் மாவட்டம், காட்டு கூட்டு சாலை அருகே ஆந்திராவில் இருந்து சுமார் 4 டன் எடை கொண்ட 500 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. காட்டு கூட்டு சாலை அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரை கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்ததில் நெல் மூட்டைகள் சிதறி சாலையில் ஓடின.
உடனடியாக சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மாப்பிள்ளை காவல்துறையினர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சாலையில் கொட்டிய நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர்.
இதனால் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.