புழல் மத்திய சிறையில் கைதி சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது
புழல் மத்திய சிறையில் கைதி சந்திக்க வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS

சதீஷ்குமார்.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறைகளில் உள்ள கைதிகளை காலையில் அவர்களின் உறவினர்களும், மாலையில் வழக்கறிஞர்களும் சந்திப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை விசாரணை சிறையில் உள்ள கைதி ஒருவரை சந்திக்க வழக்கறிஞர் எனக்கூறி ஒருவர் வந்தார். அவரது பேச்சு நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சிறை காவலர்கள் அவரின் அடையாள அட்டையை சோதனை மேற்கொண்டதில் போலி அடையாள அட்டை என தெரிய வந்தது.
இதனையடுத்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடத்திய விசாரணையில் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. வழக்கறிஞர் என்ற போர்வையில் புழல் சிறைக்குள் செல்ல முயன்ற நபரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.