/* */

கோவில் அருகே நடப்பாதையில் வைத்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை

தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறது

HIGHLIGHTS

கோவில் அருகே நடப்பாதையில் வைத்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை
X

 சிறுவாபுரியில் சாலை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ளது சின்னம்பேடு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள சாலை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அவதி ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இக்கோவிலில் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீடு கட்டுதல், நிலப் பிரச்சனை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், அரசியல் சம்பந்தமான நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூபாய் 1.கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழாநடைபெற்றது.

மண்டல அபிஷேக விழாவை தொடர்ந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வர தொடங்கி விட்டனர். செவ்வாய் கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் வரும் கார், வேன், ஜீப், பேருந்து என வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருச்சிலும் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஆலயத்திற்கு முன்பு உள்ள சாலை இரு புறம் பூ மாலை அர்ச்சனை கடைகள், காய்கனிகள், உள்ளிட்ட நடப்பாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் பக்தர்கள் வரும் வாகனங்களால் அவ்வழியாக செல்லும் வாகனங்களாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் பக்தர்கள் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நாட்களில் கோவிலுக்கு ஆயிரம் கணக்கான பக்தர்கள் சாலையில் கியூ வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் பலமுறை காவல்துறையிடமும், ஊராட்சி நிர்வாகத்திடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இப்போக்குவரத்து நெரிச்சலுக்கு காரணமாக உள்ள சாலை நடப்பாதை வியாபாரிகளுக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்து ஆக்கிரமிப்பிலே அகற்றி சாலை விரிவு படுத்தினால் பக்தர்கள் ஏதுவாக வந்து சாமி தரிசனம் செய்ய வை வகை செய்து தர வேண்டும். என்று பொதுமக்களும் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




Updated On: 25 March 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!