/* */

உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்ற சிறுமி

பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத்தில் 13 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லா ஓட்டம் மேற்கொண்ட 8 வயது சிறுமி உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றார்.

கோவிட்- 19 விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி சேலத்தில் 3 ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமியான பிரதா, 13 கி.மீ தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார். சிறுமியின் இந்த சாதனை ஓட்டத்தை மாநகர காவல்துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து துவங்கிய சாதனை ஒட்டம் அஸ்தம்பட்டி, 5 ரோடு வழியாக சென்று காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.

இதில் 13 கி.மீ தொலைவை 1.16 மணி நேரத்தில் சிறுமி கடந்தார். சிறுமியின் இந்த முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து நோபுல் புக் ஆஃப் வேர்ல்டு ரெகார்ட்ஸ் அதற்கான கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறுமியை பாராட்டினர். உலக அளவில் 8 வயதில் 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டம் மேற்கொண்டு உலக சாதனையாளர் புத்தகத்தில் ஒரு சிறுமி இடம் பிடித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Jan 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...