ஆலங்குடி அருகே சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆலங்குடி அருகே சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்
X

ஆலங்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ததை கண்டித்து சாலையில்  நெல்லைக் சாலையில் கொட்டி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. அனைத்து விவசாயிகளும் நெல்லை விற்பனைக்கு கொண்டு வரும் முன்னரே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இதனால், கடந்த 15 நாட்களாக அறுவடை செய்த நெல் மழையில் நனைந்தபடி இருப்பதாகக் கூறி விவசாயிகள் அணவயல் பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் நெல்லை சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து நெல் மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Updated On: 9 Aug 2021 1:32 PM GMT

Related News