ராசிபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

ராசிபுரம் தாலுக்கா பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராசிபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில், ராசிபுரம் தாலுக்காவில் உள்ள ராசிபும், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை வட்டாரங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி இன்று 10ம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது. வட்டார வள மையத்துக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிச் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஆக.31 ஆம் தேதி வரை இப்பணி நடைபெறுகிறது. இப்பணியில், அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட டவுன் பஞ்சாயத்து வார்டுகள், கிராமங்களில் உள்ள குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளிலும் இப்பணி நடைபெறுகிறது. இதில், 6 முதல் 18 வயது வரையுள்ள, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட உள்ளனர். கண்டறியப்படும் குழந்தைகள், இலவச கட்டாய கல்வி சட்டத்தில், பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள், இது குறித்து அருகில் உள்ள உள்ள அங்கன்வாடி மையம், பள்ளிகள் மற்றும் வட்டார வள மையத்தில் தகவல் தெரிவித்து உதவலாம் என மையங்களின் மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 Aug 2021 12:30 PM GMT

Related News