/* */

சளி, காய்ச்சல் நோய் பரவல்: எச்சரிக்கையாக இருக்க பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

Lifetime it Certifications -நாமக்கல் மாவட்டத்தில் சளி, காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

சளி, காய்ச்சல் நோய் பரவல்: எச்சரிக்கையாக இருக்க பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

Lifetime it Certifications - பருவநிலை மாற்றத்தினால், தற்போது நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் நோய் அதிகரித்து வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளி சிறார் நலவாழ்வுத் திட்டம், நடமாடும் மருத்துவக்குழு ஆகிய மருத்துவகுழுக்கல் மூலம் வட்டாரத்திற்கு 12 முகாம்கள்வீதம் மாவட்டத்தில் தினந்தோறும் 180 காய்ச்சல் கண்டுபிடிக்கும் முகாம் அமைத்து அதன் மூலம் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் உரிய சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.

மாவட்டம் முழுவதும் கடந்த 21ம் தேதி நடைபெற்ற 180 காய்ச்சல்கண்டுபிடிக்கும் முகாம்களில், 4,652 பேருக்கு பரிசோதனைசெய்யப்பட்டு 97 பேருக்கு காய்ச்சல், 69 பேருக்குசளி, இருமல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள், மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல்பார்த்துக் கொள்ளவேண்டும். பயன்படுத்தாத உரல், டயர்கள், உடைந்தபிளாஸ்டிக் பொருட்கள்போன்றவைகளில்மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்குபோன்ற காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக, மாவட்டம் முழுவதும் 693 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்புபணி, புகைமருந்து தெளிக்கும் பணி, குளோரினேஷன் ஆய்வு ஆகிய பணிகள்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பொதுமக்கள்காய்ச்சல் குறித்து எந்தவிதஅச்சமும் கொள்ளதேவையில்லை. இது முற்றிலும் பருவகாலத்தில்ஏற்படும் சாதாரண சளி, காய்ச்சலாகும். இவற்றிற்கு சிகிச்சை அளித்திட அனைத்து ஆரம்பசுகாதாரநிலையங்கள்மற்றும் ஆஸ்பத்திரிகளில் அனைத்து விதமான மருந்து மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளது. இக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். டாக்டரின் ஆலோசனையின்றி மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைதவிர்த்து உடனடியாகஅருகில் உள்ளஆரம்பசுகாதாரநிலையங்கள்மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளை அனுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 Sep 2022 10:41 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!