/* */

உயிரிழந்த மகனின் உறுப்புகள் தானம்: திமுக பிரமுகருக்கு பாராட்டு விழா

மூளைச்சாவு அடைந்த மகனின் உறுப்புகளை தானமாக அளித்த நாமக்கல் திமுக பிரமுகரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உயிரிழந்த மகனின் உறுப்புகள் தானம்: திமுக பிரமுகருக்கு பாராட்டு விழா
X

நாமக்கல் திமுக பிரமுகரின் குடும்பத்திற்கு, மாவட்ட திமுக சார்பில் ரூ.1 லட்சம் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.

மூளைச்சாவு அடைந்து மகனின் உறுப்புகளை தானமாக அளித்த, நாமக்கல் திமுக பிரமுகரின் குடும்பத்திற்கு, மாவட்ட திமுக சார்பில் ரூ.1 லட்சம் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு நகர திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் அஜித்குமார். இவர் கடந்த ஜூலை 31ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனாலும் அவரது கண்கள், இதயம், கிட்னி, கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்ட 8 உடல் உறுப்புக்கள் தானம் செய்யபட்டது.

இதையொட்டி இறந்துபோன அஜித்குமாரின் குடும்பத்தாருக்கு பராட்டு விழா மற்றும் 4வது வார்டில் ரத்த தான முகாமும் நடைபெற்றது. கிழக்கு நகர திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளர் பூபதி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மறைந்த அஜீத்குமாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளித்த அவரது குடும்பத்தினரைபாராட்டி, சான்றிதழ் மற்றும் மாவட்ட திமுக சார்பில் குடும்ப நல நிதியாக ரூ.1 லட்சத்தை கொடுத்தார். ரத்த தானம் செய்தோருக்கு அவர் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

மாநில திமுக பொறுப்பாளர்கள் மணிமாறன், நக்கீரன், நகர பொறுப்பாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த், சரவணன், ஐ.டி பிரிவு அமைப்பாளர் விஸ்வநாத், ஈஸ்வரன், செவ்வேல், டாக்டர் பிரபு, சரவணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்