/* */

நாமக்கல்லில் ஒரேநாளில் 453 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,912

நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரேநாளில் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,912 ஆக உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஒரேநாளில் 453 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,912
X

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த வாரம் வரை தொடர்ந்து 800க்கு மேல் இருந்து வந்தது. கடந்த 5 நாட்களாக படிப்படியாக எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம், மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 38,912 ஆக உயர்ந்துள்ளது. இன்று, 893 பேர் சிகிச்சை குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 33,108 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 5,467 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 10 Jun 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது