/* */

தீபாவளிக்கு ரூ.2.43 கோடி இனிப்புகள் விற்பனை செய்ய நாமக்கல் ஆவின் இலக்கு

தீபாவளிக்கு ரூ.2.43 கோடி இனிப்புகள் விற்பனை செய்ய நாமக்கல் ஆவின் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தீபாவளிக்கு ரூ.2.43 கோடி இனிப்புகள் விற்பனை  செய்ய நாமக்கல் ஆவின் இலக்கு
X

நாமக்கல் ஆவின் சார்பில் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

நாமக்கல் ஆவின் மூலம் தீபாவளி ஸ்வீட் விற்பனையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஆவின் மூலம் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழக அரசு சார்ந்த நிறுவனங்கள் தீபாவளி பண்டிகைக்காக, ஆவின் மூலம் ஸ்வீட் ரகங்கள் வாங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆவின் ஸ்வீட் விற்பனை அதிகரித்தது. இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஆவின் ஸ்வீட் ரகங்களை விற்பனை செய்ய பால் வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையொட்டி மாநிலம் முழுவதும் ஆவின் ஸ்வீட் ரகங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் இனிப்பு வகைகள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:-

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், 2018ம் ஆண்டு டிச. 17 முதல், சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனியாக செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம், பால், நெய், பால் கோவா, பாதாம் மிக்ஸ் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தீபாவளி பண்டிகைக்கென தரமாக தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், சிறந்த தரத்துடன், புதியதாகவும், தூய்மையானதாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கடந்தஆண்டு, தீபாவளி பண்டிகைக்கு, நாமக்கல் ஒன்றியம் மூலம், ஆவின் பால் உப பொருட்கள், நெய் உள்ளிட்ட பொருட்கள் ரூ. 85 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்ய, நாமக்கல் ஒன்றியத்துக்கு, விற்பனை இலக்காக ரூ. 2.43 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஆவின் தயாரிப்புகளான நெய், பால்கோவா, மைசூர்பாகு, அல்வா, மில்க் கேக் போன்ற இனிப்பு வகைகள் மற்றும் இதர இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம், சென்னை, சேலம் கரூர், கோவை, ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய ஒன்றியங்களில் இருந்து, நாமக்கல் ஒன்றியம் கொள்முதல் செய்து, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இனிப்பு வகைகளின் விலை: பால்கோவா 250 கிராம் ரூ. 130 , மைசூர்பாகு- 250 கிராம் ரூ. 140, பால் அல்வா - 250 கிரா ரூ. 120, மில்க் கேக்- 250 கிராம் ரூ. 120. ஆவின் இனிப்பு வகைகள் தேவைப்படுவோர் 96590 89008, 86108 83002, 99765 35555 என்ற மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Oct 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது