/* */

மலேசியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு: நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி அதிகரிப்பு

மலேசியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

மலேசியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு: நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி அதிகரிப்பு
X

மலேசியா நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் இருந்து, முட்டை ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில், மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அகில இந்திய அளவில், நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்திலும் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் மஸ்கட், குவைத் , கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே கப்பல்களில் கன்டெயினர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் 13ந் தேதி முதல், இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும், அங்கு அவர்களுக்கு தேவையான அளவு முட்டை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நாமக்கல் பகுதிகளில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மலேசியா நாடு முதன்முறையாக, இந்தியாவில் இருந்து அதிக அளவு முட்டைகளை வாங்க துவங்கியுள்ளது. மேலும் இன்னும் சுமார் 6 மாதங்களில் மலேசியாவுக்கான இந்தியாவின் முட்டை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. வரும் மாதங்களில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து, குறிப்பாக நாமக்கல் லில் இருந்து முட்டைகளை வாங்குவார்கள் என்று முட்டை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் நாமக்கல் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது:-

நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 10 கன்டெய்னர் மூலம் 50 லட்சம் முட்டைகள் முதன் முதலாக மலேசியாவிற்கு பரீட்சார்த்த அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வருகிறது. இந்த மாதம் மட்டும் 20 கண்டெய்னர் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட உள்ளது. இது பிப்ரவரி மாதம் இது 40 கண்டெய்னர்களாக உயரும் வாய்ப்புள்ளது. நாமக்கல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தரமாகவும், ஏற்றுமதிக்கான எடையும் சரியாக உள்ளதால், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்ணகளும் நாமக்கல் முட்டையை வாங்க தொடங்கி உள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் முட்டை விலை குறைவாகவே உள்ளது.முட்டை ஏற்றுமதிக்கு இதுவும் ஒரு வாய்ப்பாகும். ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக விரைவில் மேலும் பல நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Updated On: 25 Jan 2023 4:56 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது