குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை

குமாரபாளையம் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
X

குமாரபாளையம் போலீஸ்  நிலையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது.

குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:-

டாஸ்மாக் பார்கள் அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில் துவங்கி, அரசு நிர்ணயம் செய்த நேரத்தில் முடித்து விடவேண்டும். விதிமீறி செயல்படும் பார்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வித விதி மீறலும் இருக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் குமாரபாளையத்தில் உள்ள 12 டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

குமாரபாளையம் பகுதியில் சமீப காலமாக அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

இரு நாட்கள் முன்பு கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய், ஐந்து பவுன் நகைகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதே கோவிலில் ஒரு வருடம் முன்பு உற்சவர் சிலைகள் திருடப்பட்டன. இரு மாதங்கள் முன்பு இதே பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர் வீட்டில் 100 பவுன் நகை திருடப்பட்டது. சுற்றுப்புற பகுதியில் கிராமங்களில் ஆடு, மாடுகள், கோழிகள் திருடப்படுகின்றன.

பள்ளிபாளையம் பகுதியில் வட மாநில தொழிலாளர் கொலை, மூதாட்டி கொலை, நிதி நிறுவன அதிபர் கடத்தி கொலை என குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குமாரபாளையம் நகரில் உள்ள பார்களில் எந்நேரமும் மது வகைகள் விற்கப்படுவதாகவும், அதனால் சேலம், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த சமூக விரோதிகள் குமாரபாளையம் வந்து மது அருந்திவிட்டு, கொள்ளை மற்றும் கொலை சம்பவம் செய்து நகை, பணம் ஆகியவற்றை எடுத்து செல்கிறார்கள்.

இதனால் இரவில் அரசு நிர்ணயம் செய்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மது விற்க தடை செய்ய வேண்டும் என பல தரப்பினர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கு புகார் அனுப்பியதன் பலனாக, குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடனானஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, குறித்த நேரத்தில் மட்டும் மது குடிக்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 1 Jun 2023 3:00 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு மாநகரம்
  அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
 3. மணப்பாறை
  திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
 4. காஞ்சிபுரம்
  மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
 5. பெருந்துறை
  மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
 7. ஈரோடு மாநகரம்
  ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
 8. கோவில்பட்டி
  காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
 9. கோவில்பட்டி
  தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
 10. வாசுதேவநல்லூர்
  தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா