/* */

வடமாநில தொழிலாளர்களால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பரிதவிப்பு

குமாரபாளையத்தில் வடமாநில தொழிலாளர்களால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பரிதவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

வடமாநில தொழிலாளர்களால் சுமை தூக்கும்  தொழிலாளர்கள் பரிதவிப்பு
X

வடமாநில தொழிலாளர்களால்  பரிதவிக்கும் நிலையில் குமாரபாளையம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 

குமாரபாளையத்தில் வடமாநில தொழிலாளர்களால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பரிதவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் வைத்து சுமைகள் தூக்கி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். வழக்கமாக வேலை கொடுத்துக்கொண்டு இருந்த சில வியாபாரிகள், இந்த சங்கத்தினரை விடுத்து வடமாநில தொழிலாளர்களை சுமைகள் இறக்க அனுமதித்துள்ளனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து இவர்கள் கூறியதாவது:

நாங்கள் சிறு வயது முதல் சுமை தூக்கும் வேலை செய்துதான் வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் இப்போது வடமாநில தொழிலாளர்கள் அதிகமான பேர் ஊருக்குள் வந்ததால், எங்கள் வாழ்க்கை ஆதாரமாக விளங்கும் சுமை தூக்கும் வேலைக்கும் வந்து விட்டனர். இதனால் வழக்கமாக வேலை கொடுத்து வந்த வியாபாரிகள், தற்போது இனி வேலைக்கு வர வேண்டாம். நாங்கள் வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்கிறோம், என்று கூறிவிட்டனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரம் காக்க வேண்டும். இதில் சங்க தலைவர் குருசாமி, நிர்வாகிகள் வெங்கடேசன், பிரசாந்த், முருகேசன், ஆறுமுகம், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

.வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி வெளிமாநில தொழிலாளர்களுக்கும், படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்பை அள்ளித்தரும் வேடந்தாங்கலாக திருப்பூர் உள்ளது. பனியன் தொழிலில் கொடிகட்டி பறக்கும் டாலர் சிட்டியான திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உப தொழில் நிறுவனங்கள் என்று பல ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர திருப்பூர், அவினாசி, பல்லடம், மங்கலம், தெக்கலூர் போன்ற பகுதிகளில் பனியன் நிறுவனங்களுடன், பல ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் மற்றும் சைசிங் மில்கள், பஞ்சாலைகள் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்குள்ள பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் உள்ளூர் வாசிகள், பிறமாவட்ட தொழிலாளர்கள் என்று சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். Also Read - திருக்கோவிலூர் அருகே பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது ஆனால் நாளடைவில் திருப்பூரின் தொழில் வளர்ச்சி அதிகரிக்க தொழிலாளர்களின் தேவையும் அதிகரித்தது. ஆனால் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தினமும் எத்தனை தொழிலாளர்கள் வந்தாலும், வேலை கொடுக்க நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இதை பயன்படுத்தி வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூர் வரத்தொடங்கினார்கள். தற்போது லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றினாலும் இன்னும் தொழிலாளர்களின் தேவை பூர்த்தியாக வில்லை என்றே சொல்லலாம். இதற்கு உதாரணமாக திருப்பூரில் உள்ள பஸ்நிலையங்கள், ரெயில்நிலையம் மற்றும் முக்கிய பஸ்நிறுத்தங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் விளம்பர தட்டிகளை தொங்கவிடுவது தொழிலாளர் பற்றாக்குறையை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. இதைதெரிந்து கொண்ட பீகார், ஒடிசா, மேற்குவங்காளம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வருகின்றனர்.

திருப்பூருக்கு தினமும் பாட்னா, டெல்லி, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து 20 ரெயில்களும், வாராந்திரமாக 30 ரெயில்களும் வந்து செல்கின்றன. ஒவ்வொரு ரெயிலிலும் தினமும் சராசரியாக 100 தொழிலாளர்கள் வரை ஒரே குழுவாக படையெடுத்து வருகின்றனர். வட மாநிலங்களில் நிலவும் பஞ்சம், வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவை, திருப்பூரை நோக்கி இவர்களை மூட்டை முடிச்சுகளுடன் வரவைக்கிறது. இது, பனியன் நிறுவன உரிமையாளர்களுக்கும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் வரப்பிரசாதமாக உள்ளது.

இவர்களது, அதிகபட்ச எதிர்பார்ப்பே தங்க ஒரு இடம் கொடுத்தால் போதும். பனியன் நிறுவனத்தில் 12 மணி நேரத்துக்கும் மேல் இவர்கள் பணிபுரிய தயாராக உள்ளதோடு, கொடுக்கும் வேலையை சரியாக செய்து விடுகின்றனர். ஒரு ஆண்டு கஷ்டப்படும் ஒரு குழுவினர், ஒட்டுமொத்தமாக தங்களது சம்பளத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விடுகின்றனர். ஒரு மாதம் அல்லது 2 மாதம் கழித்து வரும் இவர்கள், ஒவ்வொருவரும் ஒரு குழுவை அழைத்து வருகின்றனர். இவர்களில் பலர் தங்கள் குழந்தைகளை இங்குள்ள தனியார் பள்ளிகளில் படிக்கவைத்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான துறையில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுமான துறை அபார வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இதற்கு தேவையான கொத்தனார், சித்தாள், கூலி ஆட்கள் பற்றாக்குறை அதிகளவு உள்ளதோடு, கூலியும் அபரிமிதமாக உள்ளது. இதனால், வட மாநில தொழிலாளர்கள், இத்துறையில் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். Also Read - மந்திராலயாவில் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி- மதியம் 2 மணிக்கு மேல் செல்லலாம் கடுமையான உழைப்பு இருந்தாலும், எளிதாக இவர்கள் பணி மேற்கொள்வதோடு, அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். வேகமாக பணிகள் நடப்பதோடு, குறைந்த கூலி என்பதால், உள்ளூர் தொழிலாளர்களைவிட, வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துவது லாபகரமாக உள்ளதால், பெரிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள் வடமாநிலத்தினரை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகின்றன.

இதன்காரணமாக முன்பு இருந்த அளவை காட்டிலும், வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. அதே நேரம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ் மொழி தெரியாமல் கடைகளில் பொருட்கள் வாங்கவும், தங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் கடைகளை தேடுவதிலும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதனால் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தினரும், வர்த்தக நிறுவனத்தினரும் தங்கள் நிறுவன பெயர்களை இந்தி எழுத்துகளில் எழுதி வைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதுபோல் உணவகங்களில் இந்தி எழுத்துகளில் உணவுகளின் பட்டியல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநகரில் பல்வேறு இடங்களில் இந்தி எழுத்துகளில் பெயர்பலகை, விளம்பர பலகை, அறிவிப்பு பலகை போன்றவற்றை காணமுடிகிறது. இது தங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதாக வடமாநிலத்தினர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Updated On: 25 Jan 2023 4:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது