/* */

104 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை

Bhavani Sagar Dam Today -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 103.96 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

104 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை
X

பவானிசாகர் அணை.

Bhavani Sagar Dam Today -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையானது தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். மொத்த கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4,791 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், அணையின் நீர்மட்டம் 103.65 அடி இருந்தது.

இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு விதிமுறைப்படி, அக்டோபர் மாதம் இறுதி வரை 102 அடி வரை மட்டுமே தேக்கி வைக்க முடியும். நவம்பர் 1-ம் தேதி முதல் அணையில் 105 அடி வரை நீரினை தேக்கி வைக்க முடியும் என்பதால் கடந்த ஒரு வாரமாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 4-ம் தேதி அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டியது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 2,796 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 300 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் 103.96 அடியாக உள்ளது. தற்போது 104 அடியை நெருங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி அணை முழுமையாக நிரம்பி நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் 67 கன அடியாக உள்ளது. மேலும், குண்டேரிப்பள்ளம் அணை மற்றும் பெரும்பள்ளம் அணைகளும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

பெருந்துறை - 7.00 மி.மீ ,

சத்தியமங்கலம் - 10.0 மி.மீ ,

பவானிசாகர் - 28.00 மி.மீ ,

சென்னிமலை - 7.00 மி.மீ ,

கொடிவேரி - 3.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 1.20 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 56.2 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 3.30 மி.மீ


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 3:54 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  7. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  8. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  9. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  10. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு