/* */

கார்த்திகை தீப விழாவில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம்: கலெக்டர் ஆய்வு

கார்த்திகை தீப முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்பி கோவிலில் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

கார்த்திகை தீப விழாவில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம்: கலெக்டர் ஆய்வு
X

அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு செய்த கலெக்டர்,  எஸ்பி மற்றும் எ.வ.வே. கம்பன்.

திருவண்ணாமலையில் இம்மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீப திருவிழா துவங்கி டிசம்பர் 6ஆம் தேதி மாலையில் மகாதீபம் ஏற்றுவதுடன் நிறைவடைகிறது.

அதற்கு முன் 24ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவம் என பரிகார தேவதைகளுக்கு திருவிழா நடைபெற உள்ளது. பின்பு 7 ம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

சாதாரணமாக கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 15 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கூடுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக தீப விழா பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தடை ஏதும் இல்லாமல் பக்தர்கள் இந்த தீப விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு அருகே உள்ள ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் தீப விழாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் முதற்கட்டமாக அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப விழா ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி அதிகாரிகள் கருத்தினை கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த வருட கார்த்திகை தீப விழாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது , எனவே பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி உடனடியாக அதிகாரிகள் பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு வசதியாக செயல்பட வேண்டும், கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு ஏற்ற கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும், சுகாதார வசதிகள் போன்றவை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நகரின் எல்லையில் ஒன்பது பகுதிகளிலும் புற பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், தேவைப்பட்டால் கூடுதலாக புதிய இடங்களிலும் பேருந்து நிலையம் அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சாலைகள் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும், குடிநீர் வசதி ,உணவு வசதிகள் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்பு பணியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டும், நவீன கருவிகள் உபயோகிப்பது, குற்றவாளிகள் கண்டுபிடிப்பதற்கு புதிய கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்பு மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே. கம்பன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் அசோக் குமார் ஆகியோர் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் ராஜகோபுரத்தில் இருந்தும், அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்தும் கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய, செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மேலும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, கலெக்டர் முருகேஷ் முருகையில் பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் எந்தவித இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

பின்பு மகா ரதத்தில் ஏறி மகாரத பராமரிப்பு பணியையும் மேற்பார்வையிட்டனர்.

Updated On: 6 Nov 2022 1:36 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!