/* */

அந்தியூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சுப்பராயன் எம்.பி. ஆறுதல்

பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில், காயமடைந்தவர்களுக்கு சுப்பராயன் எம் பி.ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சுப்பராயன் எம்.பி. ஆறுதல்
X

விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் சுப்பராயன் எம்.பி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் நேற்று மாலை அரசு மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் எம்.பி. கே சுப்பராயன் அந்தியூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்து, தரமான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அப்போது வடக்கு மாவட்ட செயலாளர் மோகன் குமார் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி பி குணசேகரன் பாலமுருகன் அந்தியூர் வட்ட செயலாளர் தேவராஜன் கனகராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 9 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!