/* */

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

HIGHLIGHTS

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து
X

விபத்துக்குள்ளான கரும்பு லாரி.

கர்நாடக மாநிலம் ஹனூரில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார். லாரியானது, அந்தியூரை அடுத்த பர்கூர் தட்டக்கரை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் ரவிச்சந்திரன் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்தும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவம் காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 17 Aug 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு