ஈரோட்டில் வீடுகளை அதிக வாடகைக்கு கேட்கும் அரசியல் கட்சியினர்.!

ஈரோட்டில் வீடுகளை அதிக வாடகைக்கு கேட்கும் அரசியல் கட்சியினரால் உரிமையாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோட்டில் வீடுகளை அதிக வாடகைக்கு கேட்கும் அரசியல் கட்சியினர்.!
X

இடைத்தேர்தலையொட்டி க.குளத்தில் வைக்கப்பட்டுள்ள பலகை.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலர் ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் விதமாக அரசியல் கட்சியினர் வீடு வீடாகவே காலை முதல் இரவு வரை வாக்காளர் பட்டியலை சரி பார்த்து, தங்கள் கட்சிக்கான வாக்குகளை பெறுவதில் இடைவிடாது தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்து வருகிறது.

இதற்கிடையே இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள், தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் வீதி வீதியாக தேர்தல் பணியை ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பணி ஆற்றுவதற்காக அந்தந்தகட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் குழுவினர், வழக்கமாக லாட்ஜ்களிலும் திருமண அரங்குகளிலும் தங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் ஒரு வித்தியாசமாக தேர்தல் குழுவினர் தங்குவதற்கு ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள வீடுகளை அரசியல் கட்சியின் குறிவைத்து வாடகைக்கு பிடித்து வருகின்றனர்.

வாக்காளர்களை சரி பார்க்கும் வகையிலும் தேர்தல் பணியை ஆற்றுவதற்காகவும் வீட்டு உரிமையாளரிடம் வழக்கமாக இரண்டு பெட்ரூம் பெரிய ஹால் உள்ள வீடுகளை குறைந்த வாடகைக்கு பெறாமல், 27 நாட்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து, வாடகைக்கு வீடு பிடித்து வருகின்றனர். இது கிழக்குத் தொகுதி சேர்ந்த வீட்டு உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

Updated On: 1 Feb 2023 1:15 PM GMT

Related News