/* */

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக விற்பனை செய்தால் நடவடிக்கை

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக விற்பனை செய்தால் நடவடிக்கை
X
பைல் படம்.

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, சென்னை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் 183 அரசு மதுபான கடைகளுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் மற்றும் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழு ஆகியோரால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3,936 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்டவிரோத மது விற்பனை செய்யும் நபர்கள் மீதும், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் கடைப்பணியாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 26 March 2024 2:15 PM GMT

Related News