/* */

பெண் கல்வியை ஊக்கபடுத்தவே திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது: கலெக்டர் திவ்யதர்சினி

பெண் கல்வியை ஊக்கபடுத்தவே திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

HIGHLIGHTS

பெண் கல்வியை ஊக்கபடுத்தவே திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது: கலெக்டர் திவ்யதர்சினி
X

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூ.32.55 இலட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகையுடன் தலா 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூ.32.55 லட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகையுடன் தலா 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி, வழங்கினார

இவ்விழாவிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் , தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, பேசியதாவது:-

தமிழக அரசு, பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்த்திற்காகவும், பெண் கல்வி ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25,000- நிதியுதவியும், 8 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000- நிதியுதவியும் 8 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கி வருகிறது.

பெண் கல்வியை ஊக்கப்படுத்தவே திருமண நிதி உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மாது சண்முகம், கே.எஸ்.ஆர்.சேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், சகிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...