/* */

கலெக்டர் கண்ணெதிரே வாக்குச்சாவடிக்குள் குதித்தவர் போலீசில் ஒப்படைப்பு

வாக்குப்பதிவு நேரம் முடிந்து துள்ளி குதித்து சாவடியில் நுழைந்த நபரை மாவட்ட கலெக்டர் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

கலெக்டர் கண்ணெதிரே வாக்குச்சாவடிக்குள் குதித்தவர் போலீசில் ஒப்படைப்பு
X

பைல் படம்.

தர்மபுரி நகராட்சி அன்னசாகரம் 33வது வார்டு பகுதியில் ஆண்கள் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு மற்ற வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடிந்த பிறகும் 33வது வார்டு ஆண்கள் வாக்கு பதிவு மையத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

உடனடியாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இப்பகுதி பதட்டமான வாக்குச்சாவடி என்பதால் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒரு சில நபர்கள் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்ததை பார்த்து அவர்களை உடனடியாக வாக்குச்சாவடி இருந்து வெளியேற்றினார். வரிசையில் நின்றிருந்த நபர்களில் சிலர் அங்குமிங்கும் திரிந்து கொண்டு மீண்டும் மீண்டும் வரிசையில் நின்றனர். அதை கவனித்து டோக்கன் இல்லாத நபர்களை கண்டறிந்து வெளியேற்றி சுமார் ஒரு மணி நேரம் வாக்குச்சாவடிலேயே வாக்குப்பதிவை கவனித்தார்.

அப்போது சில நபர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே வருவதை கண்ட மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உடனடியாக அந்த நபர்களை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார். கலெக்டர் இருக்கும்போதே இத்தகைய சம்பவம் நடைபெற்றதால் டோக்கன் பெற்ற நபர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை அன்னசாகரம் 33வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கும் வரை காத்திருந்து சீல் வைத்த பிறகு அங்கிருந்து புறப்பட்டார்.

வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே ஏராளமான அரசியல் கட்சியினர் குழுமி இருந்ததால் கூட்டத்தை கலைக்க தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன் அப்பகுதியில் அதிக நபர்கள் கூடாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

Updated On: 20 Feb 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!