/* */

விருதுநகர் மாவட்டத்தில் வேணுகோபால சுவாமி திருத்தேர் புதுப்பிக்கும் பணி மும்முரம்

விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியில் வேணுகோபால சுவாமி திருக்கோயில் தேர் கடந்த நான்கு ஆண்டுகளாக சீரமைப்புப்பணி தீவிரம்

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் வேணுகோபால சுவாமி திருத்தேர் புதுப்பிக்கும் பணி மும்முரம்
X

விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியில் அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் தேர் சீரமைப்புப்பணி

விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியில் அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திருத்தேர் கடந்த நான்கு ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது தேரை புதுப்பிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான கோயிலாகும். இக்கோயிலுக்கு சொந்தமான திருத்தேர் 1952ஆம் ஆண்டு கட்டப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.அதன் பின்னர் தேர் பழுதடைந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கிராம மக்களின் கூட்டு முயற்சியாலும் ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் ஒத்துழைப்பால் தேரை புதுப்பிக்கும் பணியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த திருத்தேர் சபதி சுதாகர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.தேரில் மிகுந்த வேலைப்பாடுடன் கூடிய பல்வேறு சிற்பங்கள் மற்றும் நான்கு பிரம்மாண்டமான இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

70 ஆண்டுகள் பழைமையான இந்த தேரை ச மறு சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும் என பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுவாமி கூறியதாவது, பாளையம்பட்டி கிராமத்தில் மிகவும் பழமையான கோபால சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான திருத்தேர் இருந்து வருகிறது.கடந்த 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருப்பதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர்.இந்நிலையில் தற்போது தேரை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள், கிராம மக்கள்திருப்தி அடைந்துள்ளனர்.விரைவில் தேரோட்டம் நடைபெற வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

Updated On: 1 May 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்