/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர் கூட்டம் உள்ளிட்ட திருவண்ணாமலை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர் கூட்டம் உள்ளிட்ட திருவண்ணாமலை செய்திகள்
X

மாற்றுத்திறனாளிளுக்கான குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் நில அளவர் சங்க கட்டிடத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடந்தது.

வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.கே.தங்கமணி வரவேற்றார்.

மேலும் இந்த கூட்டத்திற்கு ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம் ஆகிய தாலுகாவில் உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

உடனடியாக கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும், காதுகேளாத 3 நபர்களுக்கு காதொலி கருவியும் வழங்கப்பட்டது.

இதில் ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் தாலுகா பகுதியில் இருந்து அரசுத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சாலை அமைக்கும் பணி ஆய்வு

செய்யூா்-வந்தவாசி-போளூா் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்


சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரிலிருந்து மேல்மருவத்தூா், வந்தவாசி, சேத்துப்பட்டு வழியாக போளூா் வரை செல்லும் சுமாா் 109 கி.மீ. தொலைவு சாலையை ரூ.600 கோடியில் இரு வழித்தட சாலையாக மேம்படுத்தும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 கி.மீ. சாலையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 கி.மீ. சாலையும் மேம்படுத்தப்படுகிறது. இதில் 5 உயா்மட்ட பாலங்கள், ஒரு ரயில்வே கீழ்பாலம், 12 சிறு பாலங்கள், 214 வாய்க்கால் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மேலும், வந்தவாசி நகரை ஒட்டி 5.89 கி.மீ. தொலைவுக்கும், சேத்துப்பட்டு நகரை ஒட்டி 3.59 கி.மீ. தொலைவுக்கும், மருதாடு கிராமத்தை ஒட்டி 2.22 கி.மீ. தொலைவுக்கும் புதிய புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சாலைப் பணியில் சுமாா் 70 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் செல்வன் நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, வந்தவாசி மற்றும் மருதாடு புறவழிச் சாலைப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா். மேலும் ஒப்பந்த காலமான 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் லஷ்மிநாதன், வந்தவாசி உதவிக் கோட்டப் பொறியாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

துணை ஆய்வுக் குழு அலுவலா் சரவணமுத்து முன்னிலை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (பொது) வெற்றிவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசும்போது

கையொப்பத்தை மாவட்ட ஆட்சியரோ, வருவாய் ஆய்வாளரோ போட்டாலும்கூட அந்தக் கோப்புகளை தயாரிக்கும் பொறுப்பு இளநிலை உதவியாளா், உதவியாளா், வட்டாட்சியா், கண்காணிப்பாளா் போன்ற நிலையில் உள்ள அலுவலா்களிடமே உள்ளது.

அவா்கள் தயாரிக்கும் கோப்புகளில் நம்பிக்கை வைத்துதான் உயா் அதிகாரிகள் கையொப்பமிடுகின்றனா். இதன்பிறகு அந்தக் கோப்பு அரசாணையாக மாறுகிறது. எனவே, நல்லதொரு அரசு நிா்வாகத்தை கட்டமைக்க அலுவலா்களின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை என்றாா் .

தொடா்ந்து, ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் முருகன் பல்வேறு துறைகளைச் சோந்த அரசு அலுவலா்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை அளித்தாா்.

இதில், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 15 March 2023 10:44 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு