/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியல்

AIADMK Latest News -திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியல்
X

வந்தவாசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

AIADMK Latest News -தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலை தவறி செயல்படுவதாக கூறி தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்காக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வந்தார். போலீசார் அவர்களை அனுமதிக்காததால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில்.தி.மு.க.வினர் ஆமறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் , முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து வந்தவாசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 38 பேரை போலீசார் கைது செய்தார்.

வந்தவாசி தேரடியில் நேற்று மாலை நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் மணி தலைமை வகித்தார்.

எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பாலு ஒன்றிய செயலாளர்கள் லோகேஸ்வரன் பச்சையப்பன் முனுசாமி நகர செயலாளர் பாஷா பேரவை மாவட்ட துணைத்தலைவர் தர்மதுரை நகரமன்ற உறுப்பினர் ஜீபா செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 38 பேரை கைது செய்த வந்தவாசி தெற்கு போலீசார் அவர்களை தேரடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் நகர செயலாளர் செல்வம் , தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சபாநாயகரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் நாராயணன், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் , பழனி , சீனிவாசன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் குணசேகரன், அதிமுக நிர்வாகிகள் உஷா நாதன், மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆரணியில் மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு தலைமையில் ஆரணி பழைய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகாமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சபாநாயகரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார். இந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட பொருளாளரும், மாவட்ட கவுன்சிலருமான அ.கோவிந்தராசன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான வக்கீல் கே.சங்கர், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவரும், ஒன்றிய செயலாளருமான ஜி.வி. கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய செயலாளருமான பூங்கொடி திருமால், உள்பட 97 பேரை ஆரணி நகர போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Oct 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...