இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்தது. 12.1.2020 அன்று ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது திமுக வெற்றி பெறுவதற்கான போதிய கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தும் தான் அதிமுகவின் எதிர்ப்பு காரணமாக தண்டராம்பட்டு மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து மூன்று முறை தேர்தல் அறிவித்தும் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்த தண்டராம்பட்டு மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதே போல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர். ஜோதி ராஜினாமா செய்தார். எனவே காலியாக உள்ள செய்யாறு ஒன்றிய குழு தலைவர் தேர்தல் வருகிற 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On: 13 Oct 2021 1:56 PM GMT

Related News