/* */

ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்

குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, ஜேசிபி இயந்திரங்களை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்
X

ஜேசிபி இயந்திரம் சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்.

குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, ஜேசிபி இயந்திரங்களை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது.

அதன்படி திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மலைக்குன்று அடிவாரப் பகுதிகளை அழித்து குப்பை கிடங்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இங்கு திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட குப்பைகள் மட்டுமல்லாமல் திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால், மலை சுற்றும் பாதையை ஒட்டியுள்ள கிராமங்களான அடிஅண்ணாமலை, ஆடையூர் ஆகிய கிராமங்களில் குப்பைகளை கொட்ட இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது

இதற்கு ஆடையூர், தேவனந்தல், புனல் காடு, கலர் கொட்டா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கே குப்பை கிடங்கை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புனல் கார்டு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலத்தை சமம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது

இதற்கு புனல்காடு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் காலில் விழுந்தும், மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறி குப்பை கிடங்கை அமைக்க கூடாது என சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்நிலையில் நேற்று பொதுமக்கள் அந்த இடத்தை சீரமைத்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பெண்கள் ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைத்தால் நிலத்தடி குடிநீர் மாசுபடும், சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே இங்கு குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என தெரிவித்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கு குப்பை கிடங்கு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சிறைபிடித்த வாகனங்களை பொதுமக்கள் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்

Updated On: 4 May 2023 1:21 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்