/* */

விழுப்புரம்–காட்பாடி– திருப்பதி ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி முதல் துவக்கம்

Katpadi To Tirupati Train Timings Tomorrow-விழுப்புரம் – காட்பாடி – திருப்பதி இடையிலான ரயில் சேவை ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம்–காட்பாடி– திருப்பதி ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி முதல் துவக்கம்
X

Katpadi To Tirupati Train Timings Tomorrow-விழுப்புரம் – காட்பாடி – திருப்பதி இடையிலான ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் சேவைகள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்டன. இந்நிலையில், பல நாட்களாகவே விழுப்புரம் – காட்பாடி – திருப்பதி இடையிலான ரயில் சேவை துவக்க வேண்டும் என என கோரிக்கை வைக்கப்பட்டது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் – காட்பாடி – திருப்பதி இடையிலான ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதித்துள்ளது. மேலும், ஜூலை 1-ஆம் தேதி முதல் விரைவு ரயிலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயில் தினமும் மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு காட்பாடிக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும். பின்னர் திருப்பதிக்கு இரவு 11 மணிக்கு போய் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பதி- காட்பாடி விரைவு ரயில் அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு காலை 4.55 மணிக்கு வந்து சேரும்.

மீண்டும் காட்பாடியிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 8.50 மணிக்கு வந்து சேர்ந்து விழுப்புரத்திற்கு காலை 10.45 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் பேருந்தில் செல்வதற்கு டிக்கெட் விலை ரூபாய் 60 என உள்ளது. அதேவேளையில் முன்பு நடைமுறையில் இருந்த பயணிகள் ரயில் வண்டியில் செல்வதற்கு கட்டணம் ரூபாய் 20 தான் இருந்தது.

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்வதற்கு பேருந்து கட்டணம் ரூபாய் 90 அதே ரயில் வண்டியில் செல்வதற்கு ஒருவருக்கு 30 ரூபாய் தான். வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு திருவண்ணாமலையில் இருந்து செல்வதற்கு ரயில் வண்டியில் செல்வது நோயாளிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

திருவண்ணாமலையிலிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வேலூர் சி.எம்.சி. அல்லது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். இந்த இரண்டு பகுதிகளுக்கும் செல்ல வேண்டுமென்றால் ரயில் பயணம்தான் கட்டணமும் குறைவு நோயாளிகளுக்கும் வசதியாக இருந்தது.

ஆனால் தற்போது சிறப்பு விரைவு ரயில் என்ற போர்வையில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு நடைமுறையில் இருந்த பயணிகள் ரயில் காட்பாடியில் இருந்து விழுப்புரம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் தற்போது சிறப்பு விரைவு ரயில் என்று அறிவிக்கப்பட்டு மீண்டும் முந்தைய பயணிகள் ரயில் போல அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமும் இரு மடங்காகியது.உதாரணத்திற்கு திருவண்ணாமலை விழுப்புரம் முந்தைய பயணிகள் ரயிலில் 20 ரூபாய் கட்டணமாக இருந்தது தற்போது அது 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பயணிகள் ரயில் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 10:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!