/* */

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
X

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். கருவூல அலுவலர் முத்து.சிலுப்பன் ஒய்வூதியர் நேர்காணல் குறித்து விளக்கவுரையாற்றினார். ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கங்காதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகளின் படி மாநில அரசால் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.

மருத்துவப்படியாக மாதம் ரூ.300-ஐ ரு.1000-மாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தி நிபந்தனைகளின்றி முழு சிகிச்சை தொகையினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் சாது, ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், மாவட்ட துணை தலைவர் நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

Updated On: 19 Jun 2022 6:44 AM GMT

Related News