/* */

திருவண்ணாமலையில் சாலைமறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்

திருவண்ணாமலையில் கால்வாயை சீரமைக்கக்கோரி, வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சாலைமறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்
X

சாலைமறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.

திருவண்ணாமலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் பணியைத் தொடங்காமல் உள்ள நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து வணிகர்கள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவண்ணாமலை நகரம், வேட்டவலம் சாலை பேருந்து நிறுத்ததில் இருந்து, ரயில்வே கேட் (விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை) வரை, சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 4 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதையொட்டி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாக கூறி 40-க்கும் மேற்பட்ட வீடுகள், சுற்றுச் சுவர்கள் இடித்து தள்ளப்பட்டது.

இந்நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக 4 அடி அகலம், 5 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், கழிவுநீர் கால்வாய் கட்டாமல் உள்ள நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர், வேட்டவலம் சாலை பேருந்து நிறுத்தம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள், சாலையின் குறுக்கே 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை நிறுத்தினர். இதனால், விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்கள், கடலூர் - சித்தூர் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கூறுகையில்,

சாலை விரிவாக்கம் மற்றும் ராட்சத கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை கடந்த 4 மாதத்துக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர். இதற்காக பலரது வீடுகள் இடிக்கப்பட்டது. மேலும், கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 4 அடி அகலம் மற்றும் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டினர். ஆனால், கழிவுநீர் கால்வாய் கட்டவில்லை. இதனால், கடைகள் மற்றும் வீடுகளுக்கு செல்வதில் சிரமமாக உள்ளன. கழிகளை கட்டி, வழித்தடம் அமைத்து பயன்படுத்தி வருகிறோம். கழிகளின் மீது குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்லும்போது ஆபத்தாக உள்ளது, என்றனர்.

இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு மனு அளித்தும் பலன் இல்லை. மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அகற்றப்படாததால், கழிவுநீர் கால்வாயை அமைக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மின்சாரத் துறையிடம் கேட்டபோது, மின் கம்பங்களை அகற்றுவதற்கான நிதியை வழங்கினால், உடனடியாக அகற்றப்படும் என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க கலெக்டர் முருகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் . கழிவுநீர் கால்வாய் தோண்டிய பள்ளத்தால், வியாபாரமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது மின்கட்டணம், கடை வாடகை செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம், எனக் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அந்த இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 1 Feb 2023 1:26 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?