/* */

மழையால் குடை பிடித்தபடி பயணித்த மக்கள்: 'சிறப்பு' பேருந்தால் சோதனை!

பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்துக்குள் கொட்டியதால் பேருந்துக்குள் குடை பிடித்தவாறு பயணிகள் பயணம் செய்தனர்.

HIGHLIGHTS

மழையால் குடை பிடித்தபடி பயணித்த மக்கள்: சிறப்பு பேருந்தால் சோதனை!
X

அட, நம்புங்க! நம்ம அரசு பேருந்துகளோட நிலைமை தான் இது. மழைக்காலங்களில் அரசு பேருந்து ஒழுகியதால், குடை பிடித்தபடி பயணித்த பயணிகள். 

பௌர்ணமியை முன்னிட்டு பிற மாவட்ட மக்கள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்காக வேலூரில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அப்படி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து ஒன்று, நேற்றிரவு 7.00 மணி அளவில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சென்றுள்ளது.

அப்போது, பலத்த மழை பெய்தது. இதனால், அந்த பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்துக்குள் கொட்டியுள்ளது. இதனால் பெரும் அவதிக்குள்ளான பயணிகள், பேருந்துக்குள்ளேயே குடை பிடித்தவாறு பயணித்தனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்போது, இது போன்ற பழைய பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

Updated On: 17 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?