/* */

விவசாய உற்பத்தியாளர் கள் வங்கி கடன் பெற திருவண்ணாமலை கலெக்டர் வேண்டுகோள்

Tiruvannamalai Collector -விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

விவசாய உற்பத்தியாளர் கள் வங்கி கடன் பெற திருவண்ணாமலை கலெக்டர் வேண்டுகோள்
X
திருவண்ணாமலை மாவட்டஆட்சியர்அலுவலகம் பைல் படம்.

Tiruvannamalai Collector -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பால் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், இறைச்சி பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், இனமேம்பாட்டு தொழிற்நுட்பம் மற்றும் இனபெருக்க பண்ணை, கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிக்கும் ஆலைகள், வேளாண் கழிவு மேலாண்மை ஆலைகள் அமைத்திடவும், விரிவாக்கம் செய்திடவும் வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர், தனியார் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முறையான திட்ட மதிப்பீட்டறிக்கையுடன் https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற வலைதளத்தில் நேரடியாக விண்ணப்பித்திட தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை வங்கிக்கடன் பெறும் வசதி உள்ளது. இத்திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாக இருப்பின் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலும், இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் ஆகும். எனவே இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட வலைதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனரை 9445001119 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Sep 2022 7:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு