/* */

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
X

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 23 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23 ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, 24 ம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, 23 ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும், எனவே 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள் , கோயில் இணை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் பயன் பெரும் வகையில் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், 60 ஆயிரம் லிட்டர் மோர்கள் , 60 ஆயிரம் கடலை உருண்டைகள் என உபயதாரர்கள் மூலம் வழங்க கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளது.

கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் பக்தர்கள் வசதியாக தரிசனம் செய்ய நிழற்பந்தல் வசதி செய்யப்பட்டு வருகிறது.

வட ஒத்தவாடை தெருவில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள கோல்ட் கவரிங் கடை முதல் தேரடி வீதி வழியாக பூத நாராயணன் கோவில் வரை நிழல் பந்தல் வசதி மற்றும் தரை விரிப்பு வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் தேரடி தெரு ,பூத நாராயண பெருமாள் கோவில் அருகில், வட ஒத்தவாடை தெரு, ராஜகோபுரம் முதல் திருமஞ்சன கோபுரம் என பக்தர்கள் கோவிலுக்கு வரும் வழியில் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட உள்ளது.

அதேபோல ராஜகோபுரம் முதல் திருமஞ்சன கோபுரம் வரை நகரும் நிழல் தகர கொட்டகை அமைக்கப்பட உள்ளது.

பக்தர்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் தேங்காய் நார்களினால் ஆன தரைவிரிப்பு வசதிகள் மற்றும் குளிர்ச்சி தரும் வகையில் வெண்மை நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது மேலும் தரை விரிப்புகள் அனைத்தும் தண்ணீர் தெளிக்கப்பட உள்ளது.

கோயில் வளாகத்திற்குள் நான்கு இடங்களில் போதுமான அளவிற்கு ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பயன் பெரும் வகையில் தரிசன வழியில் கூடுதலாக 50 மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 100 இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் திருக்கோயிலின் உள்ளே காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை தன்னார்வலர்கள் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலம் அகற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இருக்கைகள்;

கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெறும் வகையில் தரிசன வழியில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக பக்தர்கள் கண் குளிர்ந்து மணமகிழும் வகையில் ராஜ கோபுரத்தில் மின் அலங்காரம் இவ்வாண்டு செய்யப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு சிறப்பு வழி தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அமர்வு தரிசனம் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சித்ரா பவுர்ணமி அன்று நாள் முழுவதும் பிரசாதம் திட்டத்தின் படி கூடுதல் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் தெரிவித்தார்.

Updated On: 22 April 2024 10:02 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  8. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...