/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராமலிங்கம், துணைத்தலைவர் ஆல்பர்ட், துணை செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. அவற்றை நீக்க வேண்டும். நிலுவையில் உள்ள மருத்துவ செலவை திரும்ப அளிக்கும் விண்ணப்பங்களை விரைந்து முடிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனம் நிலுவையில் உள்ள மருத்துவ செலவு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கோரிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற துணை கலெக்டர் சாது, ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பழனி ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...