/* */

வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை கிரிவலப் பாதை மற்றும் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க  பொதுமக்கள் வலியுறுத்தல்
X

வன விலங்குகளுக்காக வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகள்,  பைல் படம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதை மற்றும் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறம் சிவனே மலையாக காட்சி தரும் தீபமலை மற்றும் கிரிவலப் பாதையை சுற்றிலும் உள்ள காப்பு காட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், மயில், முயல் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது

போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரி, குளம், விவசாயக் கிணறுகள் தண்ணீரின்றி உள்ளன. இதனால் விவசாய நிலங்கள் வடு காணப்படுகின்றன. காகம், குருவி, அணில் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீா் கிடைக்காமல் தவிக்கின்றன. அதேபோல, வனப் பகுதியிலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலும் தண்ணீா் இல்லாததால் மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா் தேடி ஊருக்குள் வருகின்றன.

இப்படி வரும் வன விலங்குகளை நாய்கள் கடித்துக் குதறுகின்றன. மேலும், மனிதா்களாலும் வேட்டையாடப்படுகின்றன.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள கண்ணமடை காப்புக்காடு வனப்பகுதியில் மான் முயல் மயில் காட்டுப்பன்றி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் பாதுகாக்க வனத்துறை மூலம் காட்டுப்பகுதிகளில் ஏராளமான தண்ணீர் தொட்டிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், தொண்டு நிறுவனம், சமூக ஆா்வலா்கள் அரசு மற்றும் தனியாா் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் வனவிலங்குகள், பறவைகளுக்கு வெயில் காலத்தில் குடி தண்ணீா் வைக்கவேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், வன விலங்குகளுக்கு குடி தண்ணீருக்கான ஏற்பாடுகளை வனத்துறை அதிகாரிகள் செய்யவேண்டும் என பொதுமக்கள், கிரிவலம் வரும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 18 April 2024 2:49 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!