/* */

மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?

தென்னேரி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 9 கால்நடைகள் பூச்சி மருந்தால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
X

தென் மேரி கிராமத்தில் ஒன்பது கால்நடைகள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் டிஎஸ்பி முரளி தலைமையிலான காவல்துறையினர்

வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 9 பசுமாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் தென்னேரி கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது அனைத்து வயல்களிலும் அறுவடை முடிந்து உள்ள நிலையில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக காலை சென்றுள்ளது.

இந்நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் கால்நடைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிராமத்திற்கு திரும்புகையில் ஆங்காங்கே திடீரென பசுமாடுகள் மயங்கி விழுந்துள்ளது.

மயங்கி விழுந்த மாடுகளுக்கு முதல் உதவி செய்வதற்குள் சுமார் ஒன்பது மாடுகள் இறந்துள்ளது. இதில். தென்னேரி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவரது இரண்டு கால்நடைகளும், அசோக்குமார் என்பவரது ஒரு காலையும் துலுக்கானும் என்பவரது ஐந்து காலையும் ரவி என்பவரது ஒரு காலையும் என 9 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.மேலும் 4 மாடுகளுக்கு முதல் உதவி இப்போது அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் , மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெல் குவியல்கள் இருப்பதாகவும் அதை மாடுகள் சேதம் செய்வதாக கண்ட ஒருவர் மாடுகளுக்கு ஏதேனும் பூச்சி மருந்து கலந்த உணவை அளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

சம்பவ இடத்தில் வாலாஜாபாத் வட்டாட்சியர் சதீஷ் , வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த மாடுகளின் பிரேத பரிசோதனை அங்கேயே நடைபெற உள்ளதாகவும் அதன் மாதிரி சேகரிக்கப்பட்ட பின்பு உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிய வருகிறது.

பசு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் இறந்ததால் மாடுகளை இழந்த கால்நடை வளர்ப்பவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Updated On: 30 April 2024 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  5. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  6. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  7. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  8. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  10. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்