/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
X

ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 

திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், சித்திரை மாத பிரதோஷ விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இன்று தமிழ் புத்தாண்டு தினம், குரு பெயர்ச்சி, பிரதோஷம், மேலும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினம் என கோயிலில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. பக்தர்களின் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நவக்கிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.

நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல தொடங்கினர். இன்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


Updated On: 14 April 2022 2:23 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
  9. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்