/* */

"ஓயா உழைப்பின் ஓராண்டு" சாதனை மலர்: திருவண்ணாமலையில் அமைச்சர் வெளியீடு

திருவண்ணாமலையில் "ஓயா உழைப்பின் ஓராண்டு" சாதனை மலரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.

HIGHLIGHTS

ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலர்: திருவண்ணாமலையில் அமைச்சர் வெளியீடு
X

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை, அமைச்சர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பாக கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்களைத் தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, "ஓயா உழைப்பின் ஓராண்டு" "கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் திராவிட மாடல் வளர்ச்சி திசையெட்டும் மகிழ்ச்சி" என்ற ஓராண்டு சாதனை மலரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு,, அவர்கள் வெளியிட்டார்.

பின்பு திருவண்ணாமலை புதிய கார் கானா தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடி புதிய நியாய விலை கடையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவர்கள் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், சரவணன், கிரி, மாவட்ட கண்காணிப்பாளர் பவன்குமார், கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், நகரமன்ற உறுப்பினர்கள் கண்ணதாசன், பிரகாஷ், வட்ட வழங்கல் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 May 2022 2:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை