/* */

புதுப்பொலிவுடன் அய்யங்குளம், பக்தர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் புனரமைக்கப்பட்ட அய்யங்குளத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் எ வ வேலு திறந்து வைத்தார்

HIGHLIGHTS

புதுப்பொலிவுடன் அய்யங்குளம்,  பக்தர்கள் மகிழ்ச்சி
X

புனரமைக்கப்பட்ட அய்யங்குளத்தை திறந்து வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலையில் சுமார் 500 ஆண்டுகள் பழமையும், ஆன்மிக பெருமையும் மிக்க அய்யங்குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

இந்த அய்யங்குளத்தை, தூய்மை அருணை சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முற்றிலுமாக தூர்வாரி சீரமைத்து, புதுப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து, புனரமைக்கப்பட்ட அய்யங்குளத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் விழா அய்யங்குளம் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, காவல் கண்காணிப்பாளர்கார்த்திகேயன், நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ்.ராஜாராம், கோமதிகுணசேகரன், சினம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை ஆணையர் ஜோதி வரவேற்றார்.

விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சரும், தூய்மை அருணை அமைப்பாளருமான எ.வ.வேலு கலந்துகொண்டு, புனரமைக்கப்பட்ட அய்யங்குளத்தில் மலர்களை தூவி மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார், அப்போது, அவர் பேசியதாவது:

தனிமரம் தோப்பாகாது, இந்த பாராட்டுக்கள் அத்தனையும் எனக்கானது மட்டுமல்ல. அனைத்து தூய்மை காவலர்களுக்கும் உண்டு. 2017ல் தூய்மை அருணை அமைப்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 7 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறோம்.

திருவண்ணாமலையில் முதன்முதலில் ஜீவா அச்சகம் தொடங்கினேன். பின்னர், லாரி உரிமையாளராக விரும்பி, திருப்பதிக்கு காய்கறி ஏற்றிச்செல்லும் லாரியை ஏலத்தில் எடுத்தேன். எனக்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருந்தவர்கள் திருவண்ணாமலையில் உள்ளனர். திருவண்ணாமலையை பசுமையாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதனை, இந்த அமைப்பு நிறைவேற்றி வருகிறது.

கொரோனா காலத்தில் தூய்மை அருணை சார்பில் மக்களுக்கான உதவிகளை வழங்கினோம். அரசு மருத்தவக்கல்லூரியில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொண்டு தேசிய தரச்சான்று பெறுவதற்கு உதவியாக செயல்பட்டோம்.

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி சிறப்பு மிக்க அய்யங்குளத்தை தூர்வாரி புனரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

16 அடி ஆழம் வரை இருந்த சேறும் சகதியையும் டாராஸ் லாரியில் 6450 நடைகள் கொண்டு சென்று அகற்றப்பட்டன. அதேபோல், அய்யங்குளத்தின் ஊற்று பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசின் முறையான அனுமதி பெற்று டாராஸ் லாரிகளில் 1270 நடைகள் மணல் கொண்டுவந்து அய்யங்குளத்தில் நிரப்பியிருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் இதில் ஈடுபட்டனர்.

கடவுள் பக்தி எனக்கு இல்லாவிட்டாலும் பக்தி என்னை விடுவதாக இல்லை, இந்த ஆன்மீக நகரத்திற்கு தொடர்ந்து சேவை செய்து கொண்டே இருப்பேன்.

தமிழ் மீது மற்றும் இலக்கியத்தின் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். பக்தி இலக்கியங்கள் தான் தமிழை வளர்த்தன. சிலப்பதிகாரம் பெண்களை போற்றியது. அநீதிக்கு எதிராக கண்ணகி போராடினார். மணிமேகலை பசிப்பிணியை போக்கினார். இந்த சிறப்பு வாய்ந்த அய்யங்குளத்தில் சுவரில் தேவாரம், திருவாசகம், திருக்குறள், திருப்புகழ் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குளத்தை சுற்றி நடைபெறும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மின்னொளி வசதி ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த குளத்தை புனரமைக்க அறநிலையத்துறையின் அனுமதி அளித்த அமைச்சர் சேகர்பாபுவுக்கும், அதற்கு காரணமாக இருந்த திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் முதல்வருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

பக்தர்கள் புனித நீராடுகிற ஆன்மிக குளமாகும். அதேபோல், தீபம் ஏற்றியதும் 3 நாட்கள் தெப்பல் உற்சவமும் இங்குதான் நடக்கிறது. அருணகிரி மலையில் இருந்து மழைநீர் இங்கு வருகிறது. செவ்வப்பநாயக்கர் காலத்தில்தான் முதன்முதலில் 480 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் புனரமைக்கப்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் புனரமைக்கப்படுகிது. செவ்வப்பநாயக்கர் பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். ஆனால், வரலாற்றை எழுதிய வடநாட்டினரால் தென்னகத்து பெருமை மறைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்..

விழாவிற்கான ஏற்பாடுகளை எ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், அண்ணாதுரை, எம்பி , கிரி, எம்எல்ஏ, ப்ரியாவிஜயரங்கன், கார்த்திவேல்மாறன் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 26 Nov 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்