/* */

உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குனர் அதிரடி

உரக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 17 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குனர் அதிரடி
X

உரக் கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

https://www.instanews.city/tamil-nadu/tiruvannamalai/arani/agriculture-officials-inspect-fertilizer-shops-in-thiruvannamalai-district-1141275

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 17 உர விற்பனை நிலையங்களின் உரிமம் நிரந்தரமாகவும், 75 விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்துறை அறிவித்தது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) அ.பாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 206 சில்லறை உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 31 மொத்த உர விற்பனை நிலையங்கள் என மொத்தம் 237 உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, உரக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 75 உர விற்பனை நிலையங்களுக்கு உர விற்பனை செய்ய தற்காலிகத் தடையும், 17 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 92 உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, உர விற்பனையாளா்கள் மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவியைப் பயன்படுத்தி விவசாயிகளின் ஆதாா் எண் மூலமாகவே சாகுபடி பரப்புக்கு தகுந்தவாறு உரங்களைப் பரிந்துரை செய்து விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

தேவைக்கு அதிகமான உரங்களை பரிந்துரை செய்யக் கூடாது. விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தெரியவந்தால் உர விற்பனை உரிமம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Jun 2022 12:55 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?