/* */

திருவண்ணாமலையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது

திருவண்ணாமலையில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. சாலைகளில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது
X

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 98, 99, 100 டிகிரி என பதிவாகி வந்த வெயிலின் அளவு நேற்று இந்த ஆண்டின் அதிகபட்சமாக 105 டிகிரி பதிவானது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

வெயிலின் தாக்கத்தால் பெண்கள் கைக்குட்டை, துப்பட்டாவால் முகத்தை மூடியபடியும், பொதுமக்கள் சாலைகளில் குடை பிடித்தபடியும் நடந்து சென்றதை காணமுடிந்தது. வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் கானல் நீர் தோன்றியது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியா்வையில் நனைந்தவாறு சாலையோரம் உள்ள மரத்தின் நிழலில் தஞ்சம் அடைந்தனர்.

ஆங்காங்கே இருக்கும் தர்பூசணி, கிர்ணிபழம், இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் வியாபாரம் களைக்கட்டியது. 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பே 105 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது. இதனால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Updated On: 1 May 2022 2:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  6. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  7. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  8. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  9. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  10. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...