/* */

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு; அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு; அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் இந்த ஆண்டு கூடுதல் நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. வெளி மார்க்கெட்டில் போதுமான விலை கிடைக்கவில்லை நெல் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூபாய் 900 வரை மட்டுமே விலை போகிறது. எனவே விவசாயிகள் கிடைத்த விலைக்கு விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவின்டால் நெல் ரூபாய் 1958 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 18,000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 50 வரை எடை கூலி என்ற பெயரில் கமிஷன் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆரணியில் இதுபோன்ற முறைகேடுகள் ஈடுபட்ட இரண்டு ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஒவ்வொரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் தெரிவிப்பதற்கான கண்காணிப்பு அதிகாரிகளின் பெயர் பதவி செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ளும்படி எழுதி வைக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

Updated On: 21 Aug 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...