/* */

காவல் நிலையத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

காவல் நிலைய அடிப்படை பணிகள் குறித்து அறிந்து கொள்ள காவல் நிலையத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.

HIGHLIGHTS

காவல் நிலையத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்
X

காவல் நிலையத்தை பார்வையிட வந்த மாணவர்கள் மற்றும் காவல்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், அந்தக் காவல் நிலையத்தை ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நேற்று பாா்வையிட்டனா்.

பொதுவாகவே காவல் நிலையம் என்றால் மாணவர்களிடம் ஒரு சிறு பயம் இருக்கும்.

காவல் நிலையத்தில் நடைமுறைகள் என்னென்ன, அங்கு எவ்வாறு செயல்படுகிறார்கள் , தவறான செயல்களை கண்டால் எவ்வாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது என்பது போன்ற தகவல்களை மாணவர்கள் அறிவதற்காக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது என தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், போலீஸ் நிலைய அடிப்படை பணிகள் குறித்த தகவல்களை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்பேரில் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது

காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து உதவி ஆய்வாளா் சுந்தரேசன் மாணவா்களிடம் விளக்கிக் கூறினாா்.

மேலும், அவா் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசியதாவது:

பள்ளி மாணவா்கள் சிறு வயதில் தவறான பாதையில் செல்லக் கூடாது. போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்காதீா்கள். எந்தப் புகாராக இருந்தாலும் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். சட்டத்துக்கு எதிரான செயல் நடப்பதைக் கண்டால், உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

புகார்களை அளிக்க வரும் பொதுமக்களிடத்தில் போலீசார் எப்படி கனிவாக பேச வேண்டும். மனுவை எப்படி பெற வேண்டும். மனுவில் அனுப்புனர், பெறுனர் எப்படி இருக்க வேண்டும் கருத்துக்கள் என்னவாக இருக்க வேண்டும்.

மேலும் காயமடைந்தவர்கள் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும், முதல் தகவல் அறிக்கை தருவதற்கு என்னென்ன தேவை என்று மாணவர்களிடம் விளக்கப்பட்டது. மேலும் போலீஸ் நிலையத்தில் எந்தெந்த பொருட்களை கையாள்வது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

பின்னா், காவல் நிலையத்தில் உள்ள சிறை, துப்பாக்கிகள், கை விலங்குகள் ஆகியவற்றை மாணவா்கள் பாா்வையிட்டனா்.

உடன் காவல் உதவி ஆய்வாளா்கள் மகேந்திரன், கிருஷ்ணமூா்த்தி, பள்ளி நிா்வாகிகள் , ஆசிரியர்கள் உள்ளிட்டோா் இருந்தனா்.

இத்தகைய முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் , பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 19 Nov 2022 1:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்