/* */

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள் பிரசாத் வடநரே, கந்தசாமிக்கு விருது

திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த சேவை செய்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு விருது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள் பிரசாத் வடநரே, கந்தசாமிக்கு விருது
X

சிறந்த சேவைக்கான தமிழக அரசின் விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள் பிரசாத் வடநரே, கந்தசாமி.

திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவையில் சிறந்து விளங்கிய மாவட்டங்களுக்கு சுகாதாரதுறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான விருது பெற்ற மாவட்டங்களின் பட்டியலை சுகாதார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மாவட்டங்களுக்கும், அதன் ஆட்சியா்களுக்கும் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதனை மதிப்பீடு செய்து தோந்தெடுக்கும் குழு அமைக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் அதன் தலைவராகவும், தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் திட்ட இயக்குநா் உறுப்பினா் செயலராகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலா், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ சேவைகள் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டனா்.

அக்குழு அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து ஆண்டு வாரியாக சிறந்த மாவட்ட ஆட்சியா்கள் தோவு செய்யப்பட்டுள்ளனா் அதன்படி 2016 - 17ம் ஆண்டுக்கான விருது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாத் வடநரே, 2020-21ம் ஆண்டுக்கான விருது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமி, ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 March 2022 1:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்