/* */

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்

யூரியா உரம் வாங்கும்போது இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்
X

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே கடைகளில் யூரியா உரத்துடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து பல்வேறு தரப்பு விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு யூரியாவுடன் இணை பொருட்கள் வாங்க நிர்பந்தப்படுத்தப்படுவதை கண்டித்து வாக்கடை புருசோத்தமன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு விவசாயிகள் வந்தனர். அவர்கள் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் எதிரில் யூரியா மற்றும் அவற்றுடன் விற்பனை செய்யப்படும் இணை பொருட்களை வைத்து பொங்கல் வைப்பது போன்று செய்து அலுமினிய பானையில் ஒன்றாக கலந்து படையலிட்டு வழிபடுவதுபோல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து வாக்கடை புருசோத்தமன் கூறுகையில், கடைகளில் யூரியாவுடன் இணை பொருட்கள் வழங்கப்படுகிறது. இவற்றின் பயன்பாடு அறியாமல் விவசாயிகள் யூரியா ரசாயன உரத்துடன் பயோ உரங்கள், உயிர் உரங்கள் கலந்து மண்ணில் இடுகின்றனர். இந்த உரங்களின் தொழில் நுட்ப விபரத்தை கடைகாரர்களோ, வேளாண் அதிகாரிகளோ விளக்கி கூறுவதில்லை. உழவர் பயிற்சி நிலையம் மூலம் உழவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி மற்றும் செயல் விளக்கம் போதுமான அளவில் தரப்படவில்லை. எனவே இந்த பிரச்சினையில் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Updated On: 19 July 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...